இனி சிரிப்புக்கு பஞ்சமில்லை.. விஜய் டிவியில் வருகிறது ரசிகர்களின் பேவரைட் ஷோ.! வைரல் வீடியோ!!
உலக வரலாற்றில் முதல் முறை.. டாக்டர் பட்டம் பெற்ற பூனை.. வியக்கவைக்கும் தகவல் இதோ.!
அமெரிக்காவில் உள்ள மர்ண்ட்ப்ளியர் மாகாணம், வெர்மென்ட் நகரில், வெர்மென்ட் ஸ்டேட் பல்கலைக்கழகத்தில், பூனை ஒன்று வசித்து வருகிறது. இந்த பூனைக்கு அங்கு இருக்கும் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மேக்ஸ் டவ் என்ற பெயர் சூட்டி அதனை அன்புடன் வளர்த்து வந்துள்ளனர்.
அன்பான பூனை
மேலும், அங்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மூலமாக கிடைக்கும் உணவுகளை சாப்பிட்டு வலம் வந்த பூனை, அனைவரிடமும் நட்பு பாராட்டி மகிழ்ச்சியாக வளர்ந்துள்ளது. இதனால் அந்த பல்கலைக்கழகத்தில் பிரபலமான பூனையாகவும் அது கவனிக்கப்பட்டு இருக்கிறது.
இதையும் படிங்க: "காதலிக்க பெண் தேவை".. வாரம் ரூ.33,000 செலவழித்து., 70 வயது முதியவரின் பகீர் செயல்.!!
பொறுப்புணர்வு அதிகம்
இந்நிலையில், மனிதர்களைப் போலவே தனது சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற பொறுப்புணர்வு கொண்ட பூனை, குப்பைகள் ஏதும் வெளியில் இருந்தாலும் அதனை குப்பை தொட்டியில் சேர்த்து பொறுப்புணர்வுடன் இருந்துள்ளது.
பூனைக்கு பட்டம்
இந்த செயலை பாராட்டி தற்போது பல்கலைக்கழக நிர்வாகம் பூனைக்கு டாக்டர் ஆப் லிட்ரேச்சர் என்ற கௌரவப்பட்டதை வழங்கி இருக்கிறது. இதனால் உலகிலேயே முதல் டாக்டர் பட்டம் பெற்ற பூனை என்ற பெயரை தற்போது மேக்ஸ் டவ் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: நடுரோட்டில் 30 வயது இளம்பெண் பலாத்காரம்; நடுநடுங்க வைக்கும் பயங்கரம்.! அதிர்ச்சி காட்சிகள்.!