மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கமலால் நடிகை ராதிகாவுக்கு ஏற்பட்ட சிக்கல்.. அவரே ஓபனாக சொன்ன தகவல்.!
கமல்ஹாசன்
சினிமா நடிகர், தொகுப்பாளர், தயாரிப்பாளர், எழுத்தாளர், இயக்குனர் என பல்வேறு திறமைகளை கொண்டவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் இந்தியன் 2 . இந்த திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு நடுவில் வெளியான நிலையில் படம் வெற்றி பெறாமல் தோல்வியை தழுவியது.
ராதிகா பேட்டி
அது மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களையும் இது எதிர்கொண்டது. இந்தியன் 2 திரைப்படத்திற்கு பின் கமல்ஹாசன் மணிரத்தினத்தின் தக் லைஃப் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த படம் இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், ராதிகா சமீபத்திய பேட்டி ஒன்றில் கமலஹாசன் குறித்து பேசியுள்ள விஷயம் சர்ச்சையாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: தமிழில் ஜான்வி கபூர் சொன்ன ஒரு வார்த்தை.! தீவிரமாக களத்தில் இறங்கிய ரசிகர்கள்.!
நெருக்கமான காட்சிகள்
ராதிகா அந்த நிகழ்ச்சியில், "கமல் படம் என்றாலே அதில் நடிகர் நடிகையுடன் நெருங்கி பழகும் காட்சிகள் இருக்கும். இது போன்ற காட்சிகளுக்கு பயந்து பல நடிகைகள் அந்த பட வாய்ப்பை மறுத்து விடுவார்கள். அது போல கமல் பட வாய்ப்பு ஒன்றை நானும் மறுத்தேன். அந்த சம்பவத்திற்கு பின், எனக்கு பல பட வாய்ப்புகள் நழுவிச் சென்றது." என்று தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட ராதிகா
ராதிகாவின் இந்த கூற்று பாலியல் குற்றச்சாட்டை போல் இருப்பதாக தற்போது சமூக வலைதளங்களில் பலரும் கமலை தீவிரமாக எதிர்த்து வருகின்றனர். இது நெட்டிசன்கள் மத்தியில் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: ஆசையாக அழைத்து பேன்டீன் ஷாம்பு கொடுத்த வைரமுத்து - புயலை கிளப்பிய பாடகி சுசித்ரா.!