மலிவாக கிடைக்கும் கொய்யா, சுகரை குறைக்கும் அற்புதம்.. கர்ப்பிணிகளே மிஸ் பண்ணிடாதீங்க.!



guava benefits for pregnant ladies and sugar patient

அதிக நன்மை கொண்ட கொய்யா

மருத்துவம் நிறைந்த பழம் என்றாலே பலருக்கு ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை உள்ளிட்ட விலை அதிகம் உள்ள பழங்கள்தான் ஞாபகத்திற்கு வரும். இந்த பழங்களில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருக்கின்றது தான். ஆனால் இதைவிட அதிக ஊட்டச்சத்தும் நன்மையும் கொண்டது கொய்யாப்பழம் தான். 

இது எளிமையாக மற்றும் விலை குறைவாக கிடைப்பதால் கொய்யா பழத்தின் அருமை யாருக்கும் தெரிவதில்லை. கொய்யா பழத்தில் இரும்பு சத்து, மிகவும் அதிகமாக இருக்கிறது. கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் ரத்த குறைபாடு பிரச்சனையை சரி செய்ய இது ஒரு சிறந்த தீர்வு.

இதையும் படிங்க: சளி பிடித்தால், இலந்தை பழம் சாப்பிடக்கூடாதா.? உண்மை என்ன.. தெரிஞ்சுக்கலாம் வாங்க.!

கர்ப்பிணிகளுக்கு சிறப்பான பழம்

கொய்யா

மேலும், இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் அவர்களுக்கு மலச்சிக்கல் ஏற்படுவதையும் இது தடுக்கும். பொதுவாக கர்ப்பிணிகளுக்கு ரத்த சர்க்கரை அளவு கர்ப்ப காலங்களில் அதிகமாக இருக்கும். இது ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுவதால் கர்ப்பிணிகளுக்கு மிக மிக இன்றியமையாத பழமாக கொய்யாப்பழம் இருக்கிறது. 

ரத்த சர்க்கரையை இது குறைப்பதால் ரத்த அழுத்தமும் குறையும். இதனை வயதானவர்கள் சாப்பிடலாம். இந்த பழம் சாப்பிட சற்று கடினமாக இருப்பதால் வயதானவர்கள் இதனை ஜூசாக மாற்றி சாப்பிடலாம். இதன் மூலம் கொய்யாப்பழ விதைகளையும் நாம் எடுத்துக் கொள்கிறோம். எனவே, அதன் நன்மைகளும் நம் உடலுக்கு கிடைக்கிறது.

அழகை தரும் கொய்யா

செரிமான மற்றும் வயிற்று கோளாறுகளால் அவதிப்பட்டு வரும் நபர்களுக்கு கொய்யாப்பழம் மிக அவசியமானது. இது மலச்சிக்கல் மற்றும் பல்வேறு வயிற்று உபாதைகளை நீக்குகிறது. இதில் நீர்ச்சத்து மிகுந்து காணப்படுவதால் உடலை நீரேற்றமாக வைப்பதுடன் நம் முக அழகையும் மேம்படுத்த கொய்யாப்பழம் உதவுகிறது.

இதையும் படிங்க: காலை எழுந்ததும் இதை செய்ய மறந்துடாதீங்க..!