#JustIN: போலியான ஆதார் அட்டையுடன் பாராளுமன்றத்தில் நுழைய முயன்ற மூவர் கைது..!



Parliament Security Breach 3 Arrested by Delhi Police on 7 July 2024  

 

இந்திய மக்களவை மன்றத்தில், கடந்த ஜூன் 04 ம் தேதி 3ம் நுழைவு வாயில் வழியாக போலியான ஆதார் ஆட்டை கொண்டு பாதுகாப்பு தடுப்புகளை மீறி நுழைய முயன்ற 3 இளைஞர்கள் டெல்லி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவர்கள் மூவரும் சிஐஎஸ்எப் காவல் துறையினரால் பிடிக்கப்பட்டு, டெல்லி காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில், மூவரும் காசிம், மோனிஸ் மற்றும் சோயப் என அடையாளம் காணப்பட்டு இருக்கின்றனர். 

இதையும் படிங்க: #Breaking: பிரதமர் மோடியின் அமைச்சரவையில் புதுமுகங்களுக்கு மத்திய அமைச்சர் பொறுப்பு?..! 

மீண்டும் சர்ச்சை செயல்

இவர்கள் எதற்காக போலி ஆதார் அட்டை கொண்டு நாடாளுமன்ற வளாகத்தில் நுழைய முயற்சி செய்தனர்? என டெல்லி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம் நடந்த மக்களவை கூட்டத்தொடரின் போது, பார்வையாளர்கள் அரங்கில் இருந்த சிலர் பாதுகாப்பு தடுப்புகளை மீறி அவையில் நுழைந்தனர்.

இதனால் பாராளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு தொடர்பான பல்வேறு விவாதங்கள் எழுந்து பெரும் பரபரப்பை உண்டாக்கின. இதனிடையே, 2024 மக்களவை தேர்தல் நடந்து முடிந்து 18வது அமைச்சரவை பொறுப்பேற்கும் பணிகள் நடைபெறும் சூழலில் 3 இளைஞர்கள் போலியான ஆதார் அட்டையுடன் பாராளுமன்றத்திற்குள் செல்ல முயன்று சர்ச்சை நடந்துள்ளது.

இதையும் படிங்க: #Breaking: ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமா? - ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!