பக்கோடா, டீ செய்வது எப்படி?.. அரசுப்பள்ளிகளில் மாணவர்களுக்கு தொழிற்திறன் பயிற்சி அறிமுகம்.!



 Uttar Pradesh School Introduce to Self Empowerment 

 

தேசிய அளவில் வேலைவாய்ப்புகள் என்பது அரசு மற்றும் தனியார் துறைகளில் நிரம்பி கிடக்கின்றன. எனினும் பல இடங்களில் வேலை வெட்டுக்கள், புதிய வாய்ப்புகள் என அடுத்தடுத்த சுழற்சி முறை பணிகளும் தொடருகின்றன. இதனால் பலரும் சுயதொழில் செய்வது, முதலீடுகள் செய்வது என அடுத்தகட்டத்தை நோக்கி பயணம் செய்கின்றனர். 

இளம் தலைமுறையின் சிந்தனையில் மாற்றம்:
முந்தைய தலைமுறையினர் தங்களின் காலத்தில் அனுபவத்தால் அனைத்தையும் கற்றுத்தேர்ந்தாலும், இன்றைய இளம் தலைமுறை ஒருசில விஷயங்களை பெரும் பிரச்சனையாக கருதி செயல்படுகிறது. இதனால் சிறுவயதிலேயே எதிர்காலம் குறித்த பயம் உண்டாகி தற்கொலை போன்ற முடிவுகளையும் எடுக்கின்றனர். 

இதையும் படிங்க: #Breaking: உ.பியில் பயங்கரம்.. குவியல் குவியலாக பிணங்கள்.. இசைவிழா கூட்டநெரிசலில் சிக்கி 60 பேர் பலி?., 100 பேர் படுகாயம்.!  

கல்வி நிறுவனங்களில் சுய தொழிலுக்கான கற்பித்தல் தொடக்கம்:
இந்நிலையில், உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில், கற்றுப்பார் என்ற திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு கல்வியோடு பக்கோடா சுடுதல், தேநீர் தயாரிப்பது, பஞ்சர் ஓட்டுவது, பழரசங்கள் செய்வது, விவசாயம் மற்றும் டச்சு தொழில்கள் கற்றுத்தரவுள்ளனர். இந்த திட்டமானது முதற்கட்டமாக 26 பள்ளிகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பெண்ணுடன் ஜூஸ் குடிச்சது தப்பா?.. சிறுவனை கடத்தி வெளுத்தெடுத்த தந்தை.. கதறலோ கதறல்.!