"கோழைகளே... கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.." ஜிபியு விமர்சனம்.!! நடிகை திரிஷா பதிலடி.!!
ரேஷன் கடை வேட்டி-சேலையில் மெகா ஊழல்? சிக்கலில் அமைச்சர் காந்தி.. அண்ணாமலை பகிரங்க குற்றசாட்டு.!
வரும் 2026 ஆம் ஆண்டு, தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஆட்சிக்கு வந்தபின்னர், சிறைக்குச் செல்லவிருக்கும் திமுகவின் ஊழல் அமைச்சர்களில், கமிஷன் காந்தியே முதல் நபராக இருப்பார் என அண்ணாமலை கூறியுள்ளார்.
அண்ணாமலை அறிக்கை
இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசு சார்பில் பொங்கலுக்கு வழங்கப்பட்ட வேட்டி-சேலை தயாரிப்பில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது. பருத்தி துணிகளால் நெய்யப்படவேண்டிய வேட்டி-சேலையில், பாலிஸ்டர் அதிக அளவு கலக்கப்பட்டு துணிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.'
இதையும் படிங்க: தொலை நோக்குச் சிந்தனை கொண்ட பட்ஜெட்; அண்ணாமலை பாராட்டு.!
வரும் 2026 ஆம் ஆண்டு, தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஆட்சிக்கு வரும்போது, சிறைக்குச் செல்லவிருக்கும் திமுகவின் ஊழல் அமைச்சர்களில், கமிஷன் காந்தியே முதல் நபராக இருப்பார். pic.twitter.com/4M0WAxUWaN
— K.Annamalai (@annamalai_k) February 10, 2025
இதன் வாயிலாக அமைச்சர் காந்தி மிகப்பெரிய மோசடிகளை செய்துள்ளார். கடந்த ஆண்டை போல, நடப்பு ஆண்டிலும் மிகப்பெரிய அளவில் மோசடி நடந்துள்ளது. இதனால் எதிர்வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டில் மலரும். குற்றம் செய்தவர்களுக்கு உரிய தனனை கிடைக்கும்" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: #Breaking: திருப்பரங்குன்றத்தால் உண்டாகப்போகும் மதப்பிரச்சனை? இராமநாதபுரம் எம்.பி செயல்.. அண்ணாமலை கண்டனம்.!