மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
13 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியை; கோவையில் பகீர்.!
மாணவியிடம் நட்பாக பழகிய ஆசிரியை, இறுதியில் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோவில்பாளையம் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 32 வயதாகும் சௌந்தர்யா என்ற ஆசிரியை, சமூக அறிவியல் பாடம் பயிற்றுவித்து வருகிறார். இவர் உடையாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆவார்.
இதையும் படிங்க: திருமண வீட்டில் 16 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை; இளைஞர் போக்ஸோவில் கைது.. விழுப்புரத்தில் பேரதிர்ச்சி.!
மாணவிக்கு பாலியல் தொல்லை
இதேபள்ளியில், ஒன்பதாம் வகுப்பு பயின்று வரும் 13 வயது மாணவியிடம், அவர் நெருங்கிய முறையில் பழகி வந்துள்ளார். இதனிடையே, நேற்றுமுன்தனம் மாணவியை சௌந்தர்யா வெளியே அழைத்துச் சென்று வந்துள்ளார். அச்சமயம் திடீரென ஆசிரியை மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தெரியவருகிறது.
ஆசிரியை கைது
இந்த விஷயம் குறித்து மாணவி தனது பெற்றோருக்கு தெரியப்படுத்தவே, அவர்கள் கோவை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் ஆசிரியை போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், பெண் ஆசிரியை ஆண்களை போல பேண்ட், சட்டை அணிந்து, சிகை அலங்காரம் வைத்த புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: கோவை: ஸ்பீக்கரில் சவுண்ட் வைத்ததால் வந்த வினை; அப்பாவி இளைஞர் கொலை., 5 பேர் கும்பல் வெறிச்செயல்.!