வீடு வாசலில் பெண்ணுக்கு காத்திருந்த எமன்; மின்கம்பி அறுந்து தொங்கி நேர்ந்த சோகம்.! பெண் பலி.!



in Ramanathapuram Woman Dies by Electrical Attack 

 

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஆக்களூர் கிராமத்தில் வசித்து வருபவர் ஆறுமுகம். இவரின் மனைவி ஜான்சிராணி (37). தம்பதிகளுக்கு யோகஸ்ரீ (13) என்ற மகள், யோகேஷ் (9) என்ற மகன் இருக்கின்றனர். 

தம்பதிகள் புதிய வீடு ஒன்றை கட்டிய நிலையில், சமீபத்தில் தான் அங்கு குடியேறி இருக்கின்றனர். இதனிடையே, நேற்று காலை சுமார் 5 மணியளவில், ஜான்சி ராணி காலையில் எழுந்து வெட்டு வாசலுக்கு சென்றுள்ளார்.

இதையும் படிங்க: இராமநாதபுரம்: கார் - அரசு பேருந்து நேருக்கு நேர் மோதி பயங்கரம்.. 3 பேர் பலி..!

ramanathapuram

மின்சாரம் தாக்கி பலி

அப்போது, வீட்டின் முன்புறம் சென்ற மின் கம்பி அறுந்து கீழே விழுந்துள்ளது. அதிகாலை நேரத்தில் உறக்க கலக்கத்தில் சரியாக மின்கம்பியை கவனிக்கவில்லை. 

மின்கம்பி எதிர்பாராத விதமாக அவரின் கழுத்தில் உரசி தூக்கி வீசப்படவே, அவர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையார், பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதையும் படிங்க: #Breaking: இராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர் கைது.. சிங்கள கடற்படை மீண்டும் அட்டகாசம்.!