திருத்தணி: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கணித ஆசிரியர்; நொறுக்கியெடுத்த பொதுமக்கள்..!
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி, மணவூர் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் தற்காலிக கணித ஆசிரியராக வேலை பார்த்து வருபவர் பாஸ்கர்.
இவர் தன்னிடம் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரியவருகிறது. இதனால் ஒருகட்டத்திற்கு மேல் விரக்திக்கு சென்ற மாணவிகள், தங்களின் பெற்றோரிடம் தகவலை தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, ஆத்திரமடைந்த பெற்றோர்கள் ஒட்டுமொத்தமாக பள்ளிக்கு திரண்டு வந்து ஆசிரியர் பாஸ்கரை தேடிப்பிடித்து அடித்து நொறுக்கினர்.
புழல் சிறையில் அடைக்கப்பட்டார்
பின் தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், ஆசிரியரை மீட்டு காவல் நிலையம் அழைத்து சென்றனர். அங்கு நடந்த விசாரணையை தொடர்ந்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: சென்னை: 13 வயது சிறுமி பலாத்காரம்; காதல் பெயரை சொல்லி இளைஞர் பகீர் செயல்.!
திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், மாவட்ட குழந்தைகள் நலத்துறை அலுவலர் வழங்கிய புகாரின் பேரில் பாஸ்கர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: திருச்சியில் பயங்கரம்... பிரபல ரவுடி கழுத்தறுத்த படுகொலை... பழிக்கு பழி வாங்கும் நடவடிக்கையா.?