சார், வெறும் ₹.1500 தான்.. உல்லாசத்திற்கு அழைத்து.. போலீஸிடம் சென்று சிக்கிய விஷமிகள் கைது.! 



Kanyakumari 2 women caught by police who were did prostituted 

கன்னியாகுமரியில் விபச்சாரத் தொழிலானது கொடிகட்டி பறப்பதாக அடிக்கடி போலீசுக்கு தகவல் வந்து கொண்டே இருந்தது. ஆனால் குற்றவாளிகளை பிடிக்க எவ்வளவோ முயற்சித்தும் அனைத்தும் வீணாகின. 

இந்த நிலையில், தற்போது போலீசிடமே தேடிவந்து இரு பெண்கள் அவரை உல்லாசத்திற்கு அழைத்து தானாக சென்று சிக்கி இருக்கின்றனர். சம்பவ தினத்தில் மதிய நேரத்தில் தனியாக ஒரு நபர் நின்று கொண்டு இருந்துள்ளார்.

kanyakumari

அப்போது அவரிடம் நடுத்தர வயது கொண்ட இரு பெண்கள் வந்து 21 வயது அழகான இளம் பெண் தங்களிடம் இருப்பதாக கூறி வெறும் 1500 ரூபாய் மட்டும் கொடுத்தால் போதும் என பேரம் பேசி இருக்கின்றனர். அவர்களுடன் நயமாக பேசிய அந்த நபரும் அவர்களை பின்தொடர்ந்துள்ளார். 

இதையும் படிங்க: பாஜக பிரமுகர் வாகனம் மோதி கட்டிட தொழிலாளர்கள் இருவர் பலி.. குமரியில் சோகம்.!

அதன் பின் அந்த நபர் போலீஸ் என தெரிந்து இருவரும் அங்கிருந்து எஸ்கேப்பாக முயற்சித்துள்ளனர். ஆனால், அவர்களை கையும் களவுமாக அந்த போலீஸ் கைது செய்துள்ளார். கன்னியாகுமரியில் விபச்சார தொழில் கொடி கட்டி பறந்து வரும் நிலையில் போலீஸிடமே சென்று புரோக்கர்கள் ரேட் பேசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 14 வயது சிறுமியை வழக்கறிஞர் வன்கொடுமை செய்த விவகாரம்; மேலும் சிலருக்கு தொடர்பு? தொடரும் விசாரணை.!