மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"திருச்சி எஸ்.பி உட்பட பல தலைகளை சிதறடிப்போம்" - லேட் ரௌடியின் அல்லக்கைகள் அலப்பறை.. ஆப்படித்த காவல்துறை.!
திருச்சியை சேர்ந்த ரௌடி துரைசாமி. இவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருவரங்குளம், தைலமரக்காட்டில், கடந்த 11ம் தேதி காவல்துறையினரால் என்கவுண்டர் செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் அவர் உயிரிழந்த நிலையில், உடல் பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
எஸ்.பி-க்கு பகிரங்க மிரட்டல்
இதனிடையே, துரைசாமியின் ஆதரவாளர்கள் சிலர், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருச்சி மாவட்ட எஸ்.பி வருண்குமாரின் புகைப்படத்தை பகிர்ந்து, "திருச்சியில் சித்திக்க இயலாத அளவு தலைகள் சிதறும்" என்ற தகவலை பதிவிட்டு ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு இருந்தனர்.
இதையும் படிங்க: அடக்கொடுமையே... 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.!! போக்சோவில் கைது செய்யப்பட்ட 41 வயது தந்தை.!!
21 வயது இளைஞர் கைது
இதுகுறித்த தகவல் காவல்துறையினர் பார்வைக்கு செல்லவே, திருச்சி புத்தூர் எம்.ஜி.ஆர் நகரில் வசித்து வரும் ராஜபாண்டி (21) என்பவர் வீடியோ வெளியிட்டது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து, உறையூர் பகுதியில் பேருந்து நிறுத்தத்தில் பட்டா கத்தியுடன் நின்ற ராஜபாண்டியை காவல்துறைனர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: 18 வது நாளாக ஒகேனக்கல் காவேரி ஆற்றில் குளிக்க, பரிசல் இயக்க தடை; நீர்வரத்து அதிகரிப்பால் நடவடிக்கை.!